கணணி வேகத்தை அதிகரிக்க விரைவான Disk Defragmenter Tool

கணணியில் ஒரு சீரான கால இடைவெளிக்கிடையில் Disk Defragment செய்வதன் மூலம் கணணியின் வேகம் எப்போதும் குறையாமல் இருக்கும் என பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Disk Defragment என்றால் என்ன? கணணியினை எவ்வாறு விரைவாக Disk Defragment செய்து கணணியின் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு.. ப்ரேக்மன்ட்ஸ் (Fragments) என்றால் என்ன ? Hard Disk ல் கோப்பு ஒன்றை சேமிக்கும் போது நமது கணணியிலுள்ள இயங்குதளமானது அந்த கோப்பினை பல பகுதிகளாக பிரித்து அதனை நம் ஹாட் டிஸ்கில் பல்வேறு இடங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சேமிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்புகளின் சிதரள்களையே ப்ரேக்மன்ட்ஸ்(Fragments) என்கிறோம். குறித்த கோப்பின் சிதறல்கள் எங்கேங்கெல்லாம் உள்ளது என்பதை குறித்த ஹாட் டிஸ்கில் இயங்குதளம் பதிந்து கொள்கிறது.. பின் நாம் சேமித்த கோப்பினை திறக்க முற்படுகையில் இயங்குதளமானது குறித்த கோப்பு கணணி ஹாட் டிஸ்கில் எந்த Cluster ல் எந்த Sectorஇருக்கிறது என்பதை இதன் மூலம் கண்டறிந்து திறந்து கொள்ளும்.. இவ்வாறு வேவ்வேறு இடங்களில் கோப்புகளை சேமிக்கப்படும் போதும் கணணியில் மென் பொருட்க...