கணணி வேகத்தை அதிகரிக்க விரைவான Disk Defragmenter Tool

கணணியில் ஒரு சீரான கால இடைவெளிக்கிடையில் Disk Defragment செய்வதன் மூலம் கணணியின் வேகம் எப்போதும் குறையாமல் இருக்கும் என பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Disk Defragment என்றால் என்ன? கணணியினை எவ்வாறு விரைவாக Disk Defragment செய்து கணணியின் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு..


ப்ரேக்மன்ட்ஸ் (Fragments) என்றால் என்ன ?
Hard Disk ல் கோப்பு ஒன்றை சேமிக்கும் போது நமது கணணியிலுள்ள இயங்குதளமானது அந்த கோப்பினை பல பகுதிகளாக பிரித்து அதனை நம் ஹாட் டிஸ்கில் பல்வேறு இடங்களில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக சேமிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்புகளின் சிதரள்களையே ப்ரேக்மன்ட்ஸ்(Fragments) என்கிறோம்.

குறித்த கோப்பின் சிதறல்கள் எங்கேங்கெல்லாம் உள்ளது என்பதை குறித்த ஹாட் டிஸ்கில் இயங்குதளம் பதிந்து கொள்கிறது.. பின் நாம் சேமித்த கோப்பினை திறக்க முற்படுகையில் இயங்குதளமானது குறித்த கோப்பு கணணி ஹாட் டிஸ்கில் எந்த Cluster ல் எந்த Sectorஇருக்கிறது என்பதை இதன் மூலம் கண்டறிந்து திறந்து கொள்ளும்..

இவ்வாறு வேவ்வேறு இடங்களில் கோப்புகளை சேமிக்கப்படும் போதும் கணணியில் மென் பொருட்களை நிறுவும் போதும் இயங்குதளமானது HardDisk ல் பகுதி பகுதியாக பிரித்து வேவ்வேறு இடங்களில் பதிந்து கொள்ளும் பின் நாம் அதனை நீக்கும் போது சேமிக்கப்பட்ட இடங்களில் ஏராளமான இடைவெளிகள் உருவாகும்...
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில். குறித்த கோப்பு ஒன்றினை பதிகையில் ஒழுங்குமுறையின்றி கோப்புகள் சேமிக்கப்படும்..
இப்படியான கோப்புகளை திறக்க முற்படுகையில் கணணியானது அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளும்..
இதன் காரணமாக கணணியிக் வேகத்தில் மந்த நிலை உருவாகும்..

இந்த நிலையை சரி செய்து கொள்ள Disk Defragment செய்தல் வேண்டும்

கணணியினை வேகமாக்க ஹாட்டிஸ்கில் உள்ள தரவுகளை மீள ஒழுங்கு செய்து பைல்களுக்கிடையிலான இடைவெளிகளை குறைப்பதன் மூலம் கணணிக்கு பைல் ஒன்றினை  குறைந்த நேரத்தில் அணுக வாய்ப்பு ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் கணணியானது மிக வேகமாக நமக்குரிய முடிவை காட்டும்..
மேற்குறிய செயற்பாட்டையே நாம்  Disk Defragment செய்தல் என்கிறோம்..

Disk Defragment எவ்வாறு செய்வது..?
ஹாட் டிஸ்கை Defragment செய்வதற்கான டூல்  விண்டோஸ் இயங்கு தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
 •                    Start - Programs - Accessories -Tools Systemer - Disk Defragments
தெரிவு செய்யுங்கள். அப்போது  Disk Defragments  டயலொக் பொக்ஸ் தோன்றும். அங்கு உரிய ட்ரைவைத் தெரிவு செய்து Analysis என்பதை க்ளிக் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட செய்ய வேண்டிய தேவையுள்ளதா எனக் கண்டறியலாம். அதன் பின்னர் டிப்ரேக்மன்ட் செய்ய வேண்டியிருப்பின் Defragments  செய்யுங்கள்.

எனினும் இதன் மூலம்  டிப்ரேக்மண்ட் செய்வதற்கு அதிக நேரம் எடுக்கும். ஹாட் டிஸ்கின் அளவைப் பொறுத்து அந்த நேரம் வேறுபடும்.


இந்த வேலையை விரைவாகவும் தேவையான போது தானாக செய்வதற்கு உதவும் ஒரு டூலே Ashampoo Magical Defrag 3.0.2ஆகும்.


Ashampoo Magical Defrag 3.0.2இன் சிறப்பியல்பு..
 • விரைவாக  Defragments செய்யும்
 • பின்னனியில்(backgroung) இயங்கக்கூடியது
 • இதன் பிரதான சிறப்பியல்பாக கூறக்கூடியது.. நீங்கள் கணணியில் எத்தகைய வேலையும் செய்யாமல் இருக்கும் போது Ashampoo Magical Defrag ஆனது இயங்க ஆரம்பிக்கும் மீணடும் நீங்கள் கணணியின் வேலை செய்யத் தொடங்கும் போது Ashampoo Magical Defrag ஆனது Defragments செய்வதை தற்காலிகமாக இடைநிறுத்திக் கொள்ளும்..
 • மீண்டும் நீங்கள் வேலை செய்வதை நிறுத்தினால் Ashampoo Magical Defrag ஆனது இடைநிறுத்தியதில் இருந்து Defragments செய்யத் தொடங்கும் (நீங்க வேல செஞ்ச அது வேலை செய்யாது. அது வேல செய்யும் போது நீங்க வேல செய்ய மாட்டீங்க)
 • இதன் மூலம் ஆனது நீங்கள் செய்யும் பணிக்கு எந்த விதத்திலும் இடையூறு விளைவிக்காது..

Schedule  ஆக இயங்குவதால் இனி நீங்கள் Defragments செய்வது பற்றி கவலைப்பட தேவையில்லைஅதனை Ashampoo Magical Defrag பார்த்துக் கொள்ளும்..

தரவிறக்க சுட்டி : (உத்தியோக பூர்வ வலைத்தளம்) 40 நாள் இலவசம்)

Ashampoo Magical Defrag

என் போன்ற பிளாக்கில் Serial Key பெற்று வருடம் பூராக பயன்படுத்துபவர்களுக்கு விரைவில் ...

Comments

 1. நல்ல இருக்கு
  thanks
  mrknaughty

  ReplyDelete
 2. @ mrknaughty said...

  // நல்ல இருக்கு
  thanks //

  நன்றி

  ReplyDelete
 3. நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள் . அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள். http://erodethangadurai.blogspot.com/

  ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்