நமது பிளாக்கில் கையொப்பம் இடலாம் வாங்க..(Signature)

நமது பிளாக்கில் ஒவ்வொரு பதிவின் கீழும் நமது கையொப்பத்தை இடலாம்
விரைவாக நமது கையொப்பத்தையும் உருவாக்கி கொள்ளலாம்..

அனேக பிளாக்குகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் பதிவரின் கையொப்பம் இருப்பதை கண்டிருப்பீர்கள்
இதே போல் உங்களது பிளாக்கிலும் ஒவ்வொரு பதிவின் கீழும் உங்கள் கையொப்பத்தை இட விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும்

பிளாக்கில் பதிவுகளின் கீழ் கையொப்பம் இடுவதற்கான படிமுறை

படிமுறை 1 - கையொப்பம் உருவாக்குதல்
  • நீங்கள்  Photoshop போன்ற softwareல் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வடிவில் உங்கள் கையொப்பத்தை உருவாக்கி கொள்ளலாம்.
  • இணையத்தளத்தில் mylivesignature.com ஊடாக இலகுவில் உங்களுக்கு பிடித்த வடிவில்  உங்கள் கையொப்பத்தை மிக இலகுவாக உருவாக்கலாம் 
    • இணையத்தள லிங்குக்கு இங்கு கிளிக் செய்க
  • உருவாக்கிய உங்கள் கையொப்பத்தை ஏதாவது Picture sharing siteல் பதிவேற்றி உங்கள் கையொப்ப படத்திற்கான URL ஐ பெற்றுக் கொள்ளுங்கள்

சில  Picture Sharing Site:
1. http://tinypic.com/
2. http://picasa.google.com/
3.  http://www.flickr.com/
4. http://zooomr.com/
5. http://photobucket.com/

படிமுறை -2  பிளாக்கரில் கையொப்பம் இடல்

1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்

2. Layout > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும்

3..பின் கீழுள்ள HTML ல் நிரலில்
<div class='post-footer-line post-footer-line-1'>

அந்த வரி கிடைக்காவிடின் இதனை தேடவும்
<p class='post-footer-line post-footer-line-1'>

அல்லது
<data:post.body/>

என்ற வரியினை கண்டுபிடித்து அதன் கீழ் கீழேயுள்ள வரியினை சேர்த்துவிடவும்
<img src='உங்கள் கையொப்ப படத்திற்கான URL' style='border:0px;'/>

Save Template என்பதை அழுத்தி உங்கள் Template ஐ சேமித்து கொள்ளுங்கள்

இனி உங்கள் ஒவ்வொரு பதிவின் கீழும் உங்கள் கையொப்பம தோன்றும்

Comments

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்

டெஸ்டொப்பில் இருந்து விரைவாக Facebook இற்கு புகைப்படங்களையும் விடியோக்களையும் Upload செய்து கொள்ளலாம்