கணணி பாவிப்பவர்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விடயங்கள்

கணிணி பாவிப்பதில் சுகாதாரமாக இருக்க சில குறிப்புகள் கீழே வாசியுங்கள். Repetitive Stress Injuries பொருத்தமற்ற மேசை கதிரைகளை பாவிப்பதன் மூலம் இருக்கும் நிலை பிழையாவதனால் தலை கைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம். உங்கள் உடலின் சுகாதாரத்தைப் பற்றி அக்கறை காட்டும் நீங்கள் இதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை என்னவென்று பார்ப்போம். இருப்பு கணணியை பாவிக்கும் போது உங்கள் உடம்பு அதிகம் அசையாது ஆகையால் பொருத்தமான கதிரை ஒன்றை பாவிப்பது அவசியமாகும். தலையனை, பெட்டிகள், மற்றும் பெரிய புத்தகங்கள் போன்றவை உங்கள் கதிரையை தேவையான படி செய்து கொள்ள உதவும். உங்கள் பாதங்கள் கீழே படாவிட்டால் அந்த உயரத்திற்கேற்ற ஒரு பெட்டியையோ பல புத்தகங்களையோ பாதத்தின் கீழ் வைத்துக்கொள்ளலாம். கணிணியின் கதிரையை சரியாக அமைத்துக்கொள்ளல் உங்கள் கதிரை சரியாக அமைந்து ஆனால் கணிணியின் மேசை உயரத்தில் அமைந்தால் தலையனைகளை பாவித்து உயரத்தை அதிகறித்துக்கொள்ளலாம். அல்லது உயர்ந்த கதிரையொன்றை பாவிக்கலாம் அல்லது உயரமற்ற ஒரு மேசையை தேடிக்கொள்ளலாம். கணிணியின் keybo...