Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள்

இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம்.

அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது பென் ரைவினை நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது.

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நமது ரகசிய ஆவணங்களை மற்றையவா்கள் பார்க்க முடியாதவாறு பென் ரைவில் மறைத்து வைத்தல் வேண்டும். இதற்கு 1.69MB அளவையே கொண்டWinMend Folder Hidden எனும் ஒரு சிறிய மென்பொருள் உங்களுக்கு உதவிடும்.

இந்தமென்பொருளை பயன்படுத்தி உங்கள் Pen Drive ல் மறைக்கப்பட்ட கோப்புகளை வேறு எந்தக் கணனியிலும் திறக்க முடியாது.

இந்த மென்பொருளின் மூலம் உங்கள் பென் ரைவில் மாத்திரமின்றி உங்கள் கணணியில் உள்ள கோப்புகளையும் மறைக்க பயன்படுத்தலாம்

WinMend Folder Hiddenமென்பொருளின் தரவிறக்க சுட்டி இங்கு அழுத்தவும்

உங்கள் கணணியில் WinMend Folder Hidden  மென்பொருளினை நிறுவியபின் முதலில் திறக்கும் போது கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள் கடவுச்சொல்லை கொடுத்து OK ஐ அழுத்தவும்.


பின் கீழ் உள்ளதை போன்று விண்டோ திறக்கும் இதில் Hide Folder அல்லது Hide File(s)  என்பதனை அழுத்தி உங்கள் ஆவணங்களை தேர்வு செய்து விட்டு விண்டோவை மூடி விடவும்.


இப்போது நீங்கள் தோ்வு செய்த ஆவணங்கள் அல்லது கோப்புகள் மறைக்கப்பட்டு காணப்படும். இப்போது உங்கள் பென் ரைவில் நீங்கள் மறைத்த ஆவணம் உங்கள் கணணியில் மாத்திரமின்றி வேறு கணனியிலும் காட்டாமல் மறைக்கப்பட்டிருக்கும்.

மறைக்கப்பட்ட கோப்புகளை மீண்டும் செயற்படுத்த WinMend Folder Hidden மென்பொருளை திறக்கவும் திறக்கும் போது உங்கள் கடவுச்சொல்லை உள்ளிடும் படி கேட்டும்

உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்ட பின் கிடைக்கும் திரையில் Unhide என்பதை அழுத்தி பார்வையிடலாம்.

மேலதிக தகவலுக்கு WinMend Folder Hidden மென்பொருளின் உத்தியோக வலைத்தளத்திற்கு இங்கு அழுத்துக

-Farhath Mohamed Farook-

Comments

  1. Mr.Farhath Ur very great.u always give us to a very use full news.its must want continue as a big level....congratulations...........

    ReplyDelete
  2. நீண்ட நாட்கள் கழித்து பதிவிட்டு இருக்குரீர்கள் நன்றி....

    ReplyDelete
  3. @Download Gprsஆமாங்க நீண்ட நாட்களுக்கு பிறகு இப்போது தான் நேரம் கிடைத்தது இனி தொடா்ந்து வருவோம்

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை