facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?

இந்த பதிவானது எவ்வாறு பேஸ்புக் வீடியோக்களை உங்கள் பிளாக்கில் அல்லது இணையப்பக்கத்தில் உட்பொதிப்பது(embed) என்பதைப்பற்றிய பதிவாகும்



நீ்ங்கள் facebook தளத்தில் பல்வேறு வகையான வீடியோக்களை நண்பர்கள் பதிவேற்றியவைகளை பார்ப்பீர்கள் இவற்றில் சிலதை உங்கள் வலைப்பக்கத்தில் பகிர்ந்து கொள்ள விரும்பலாம். 

ஆனால் YouTube, Dailymotion மற்றும் பிற ஆன்லைன் வீடியோ பகிர்வு தளங்களை போன்று பேஸ்புக் வீடியோவை உங்கள் வலையில் உட்பொதிக்க முடியாது, பேஸ்புக் ஆனது அவர்களின் வீடியோக்களை ஏனைய வலையில் பகிர்ந்து கொள்ள உட்பொதிப்பு வசதியினை வழங்குவது இல்லை .

ஆனால் சிற குறுக்கு வழிகளினை உபயோகிப்பதன் மூலம் facebook வீடியோவினை நமது தளங்களில் தோன்றச் செய்யலாம்.


பேஸ்புக் வீடியோவை எப்படி உங்கள் வலைப்பதிவில் தோன்றச் செய்யலாம் என பார்ப்போம்

உங்கள் வலைத்தளத்தில் பேஸ்புக் வீடியோவை உட்பொதிக்க இந்த எளிய முறையினை பின்பற்றவும்.

1. எந்த வீடியோவினை பகிர விரும்புகிறீர்களோ அந்த வீடியோவுக்கான தலைப்பில் அழுத்தி குறித்த வீடியோவுக்கான பக்கத்திற்கு செல்லவும்



2. குறித்த வீடியோ பக்கம் வந்ததும் உங்கள் உலாவியின் அட்ரஸ் பாரில் V= என்பதற்கு அருகில் உள்ள இலக்கத்தினை கொப்பி (copy) செய்து கொள்ளுங்கள்
(இதுவே அந்த குறித்த வீடியோக்கான id  ஆகும். facebook இல் ஒவ்வொரு வீடியோவும் ஒவ்வொரு idயினை கொண்டிருக்கும் ) 



பின் கீழ் உள்ள html நிரலில் சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ள இடத்தில் அந்த வீடியோவுக்கான ID யினை உள்ளிட்டு எங்கு உங்கள் வலைப்பத்தில் பகிர வேண்டுமோ அந்த இடத்தில் அந்த html  நிரலியினை உள்ளிடுவதன் மூலம் குறித்த அந்த வீடியோவினை உங்கள் தளத்தில் பகிர்ந்து கொள்ள முடியும்

Facebook embed Code


<object width="400" height="224" >
<param name="allowfullscreen" value="true" />
<param name="allowscriptaccess" value="always" />
<param name="movie" value="http://www.facebook.com/v/Facebook-Video-ID-Here" />
<embed src="http://www.facebook.com/v/Facebook-Video-ID-here" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="400" height="224">
</embed>
</object> 

மேற்கூறிய முறையில் என்னால் பகிர்ந்து கொள்ளப்பட்ட facebook வீடியோ கீழே காணப்படுகிறது..


Comments

  1. நல்ல தகவல் நன்றி நண்பா

    ReplyDelete
  2. அருமையான பதிவு.

    ReplyDelete
  3. அன்பு இளவலே! அருமையான அவசியமான பதிவினைத் தந்தமைக்கு நன்ற்!

    ReplyDelete
  4. உண்மையிலேயே இது மிக மிகப் பெறுமதியான பகிர்வு நன்றி சகோதரம்...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

Google Earth ல் நம் படங்களை இடுவதற்காக வழிமுறை