பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

பிளாக்கரில் புதிதாக வலைப்பூ தொடக்கியுள்ளவா்கள் என் மின்னஞ்சலின் ஊடாக அடிக்கடி கேட்கும் கேள்வி பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டி (Nav Bar) தங்களது வலைப்பூவினை அழகற்று காட்டுவதாகவும் அதனை எவ்வாறு நீக்குவது என்பதாகும். சகல புதிய பிளாக்கா் பயனாளிகளும் பயனளிக்கும் விதமாக எவ்வாறு பிளாக்கரில் Navigation Bar நீக்குவது என்பதனை இங்கு பதிவாக இடுகின்றேன். 1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள் 2. பின் Dashboard ல் design > Edit HTML சென்று Expand your Widget Templates எ ன்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் 3. பின் கீழுள்ள HTML ல் நிரலில் ]]></b:skin> என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதற்கு பதிலாக #navbar-iframe,#navbar { display: none !important; } ]]></b:skin> மேலே உள்ள வரிகளை நகலெடுத்து ஒட்டிவிடுங்கள்.. [விபரப்படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்] 4.இறுதியாக உங்கள் டெம்ளேட்டை சேவ் செய்யுங்கள் இனி உங்கள் வலைப்பூவில் Nav Bar தோன்றாது.. -Farhath Mohamed Farook-