Skype பயனர் பெயரை கணணி சேமிப்பில் இருந்து நீங்குவது எப்படி?


Skype ஆனது நாம் பயனர் பெயர்(skype Name) மற்றும் கடவுச் சொல்(password) ஆகியவற்றை கொடுத்து உள்நுழையும் போது பயனர் பெயரானது அந்த கணணியில் தானாகவே சேமித்துக் கொள்ளும் ....

பின் மீண்டும் நாம் Skype உள்நுழைய பயனர் பெயரை dropdown listல் இருந்து தெரிவு செய்து கடவுச் சொல்லை கொடுத்து உள்நுழைந்து கொள்ளலாம்.

இதுவே நமது நண்பர்கள் நமது கணணியில் Skype யினை உபயோகிக்கும் போது அவர்களுடைய Skype பயனர் பெயரும் நமது கணணியில் சேமித்துக் காணப்படும்.

அதே போல் நாம் மற்றையவர்களுடைய கணணியில் இருந்து Skype யினை உபயோகிக்கும் போது நமது Skype பயனர் பெயரானது அவர்களுடைய கணணியில் சேமிக்கப்படும். சிலர் இதனை அழிக்க எண்ணுவர் .


கணணியில் சேமிக்கப்பட்டுள்ள நமது அல்லது மற்றயவர்களுடைய Skype பயனர் பெயரை skype dropdown list ல் இருந்து அழிப்பதற்கான படிமுறை

1. தட்டச்சில் ஒருங்கே winkey + R அழுத்துக அப்போது run window தோன்றும்
(அல்லது start சென்று RUNஎன்பதை கிளிக் செய்க)

2. Run window ல் %appdata%\skype என டைப் செய்து enter கீயை அழுத்தவும்

3.அப்போது windows explorer சாளரம் தோன்றும். அதில் ஒவ்வொரு skype பயனர் பெயரிலும் ஒவ்வொரு folder உருவாகியிருப்பதை காணலாம்

அதில் தேவையற்ற பயனர் பெயரில் உள்ள folder ஐ நீக்கி விடவும்..

4. இனி skypeஐ மூடிவிட்டு மீண்டும் திறக்கவும்
இப்போது தேவையற்ற பயனர் பெயர் நீங்கி இருப்பதை காணலாம்...

Comments

Popular posts from this blog

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

facebook வீடியோவினை வலைப்பதிவில் பகிர்ந்து கொள்வது எப்படி?