Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி?

நாம் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை நமது பிளாக்கில் எழுதி இருப்போம்.  அதற்கு பொருத்தமான லேபளையும் இட்டிருப்போம். இந்த குறித்த லேபளை கிளிக் செய்யும் போது அந்த லேபளையுடைய அனைத்து பதிவுகளின் பக்கங்களும் தோன்றும். இந்த குறித்த லேபளின் கீழ் அதிகமான பதிவுகள் இருப்பின் Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிட வேண்டியிருக்கும். இது நமது வாசகர்கள் தமக்கு  வேண்டிய பதிவுகளை தேடி படிப்பதற்கு சிரமமான காரியமாக இருக்கும்.
இதை விடுத்து நமது பதிவுகளின் பொருளடக்கத்தை (Table of Content) தனியே ஒரு பக்கத்தில் காட்டினால் நமது வாசகர்கள் தமக்கு பிடித்த பதிவை எளிதாக இணங்கண்டு படித்துக் கொள்வார்கள்.

அதாவது தனியே ஒரு பக்கத்தில் குறித்த ஒவ்வொரு லேபளின் கீழும் நாம் எழுதிய அனைத்து பதிவுகளின் தலையங்கம் மட்டும் அதுவும் நாம் எழுதிய புதிய பதிவின் அருகில் NEW என்ற குறிச் சொல்லுடன் காட்சியளித்தால் நமது வாசகர்களுக்கு நமது பதிவை படிப்பதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்...

Table of Content எனது Demo Page ஐ பார்வையிட இங்கே அழுத்தவும்

தனியே ஒரு பக்கத்தில் இவ்வாறான பொருளடக்கத்தை காட்டும் Table of Content ஐ எவ்வாறு நமது பிளாக்கரில் இணைப்பது என்பதை பார்ப்போம்.

1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள்
2. ஒருங்கே  Posting---> Edit Page என்பதை கிளிக் செய்யுங்கள்..
 3. பின் New Page என்பதை கிளிக் செய்து வரும் பக்கத்தில்  Page Title என்பதில் உங்கள் பக்கத்திற்கான பெயரை கொடுக்கவும். (ex: table of Contents)

4. பின் Edit HTML என்பதை கிளிக் செய்து பின் HTML box ல் கீழே உள்ள HTML ஐ வரியினை பிரதி செய்யுங்கள்
<link href="http://farhathcool.googlecode.com/svn/trunk/toc/acc-toc.css" media="screen" rel="stylesheet" type="text/css"></link>
<script src="http://farhathcool.googlecode.com/svn/trunk/daftarisiv2-pack.js">
</script>
<script src="http://www.farhacool.blogspot.com/feeds/posts/summary?max-results=1000&amp;alt=json-in-script&amp;callback=loadtoc">
</script>
<script type="text/javascript">
var accToc=true;
</script>
<script src="http://farhathcool.googlecode.com/svn/trunk/gadgets/toc/accordion-pack.js" type="text/javascript">
</script>
********
farhacool.blogspot.com என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பூவின் முகவரியினை உள்ளிடவும் *********

இறுதியாக published Page என்பதை கிளிக் செய்து பக்கத்தை சேமித்து கொள்ளுங்கள்
.......

Comments

  1. Is any way to have this facility for wordpress....... . very nice feature... ..

    ReplyDelete
  2. மிக உபயோகமான குறியீடு

    ReplyDelete
  3. பயனுள்ள கருத்துக்கள். எனக்கொரு சந்தேகம் தீர்த்து வைப்பீர்கள் என நம்புகிறேன். என் http://kalaimahanfairooz.blogspot.com வலைத்தளத்தில் மேலேயுள்ள தமிழ்மண கருவிப்பட்டை சிக்கலாக - பதிவுத்தலைப்புக்கு உள்ளேயே காணப்படுகிறது. அதனை நீக்கி உங்கள் வலைத்தளத்தில் உள்ளதுபோல் எவ்வாறு கீழே கொண்டுவருவது? தயவுசெய்து அறியத்தரவும்.

    ReplyDelete
  4. எனது தமிழ் வலைப்பூவில் நீங்கள் கூறியதுபோல பொருளடக்கம் சேர்த்து விட்டேன்.

    ஆனால் சில லேபல்களின் கீழே முழு பட்டியலும் வரவில்லையே.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  5. @கலைமகன் பைரூஸ்
    பைரூஸ் உங்களுக்கான பதிலை உங்கள் ஈமெயில் முகவரிக்கு அனுப்பியுள்ளேன் பார்க்கவும்

    ReplyDelete
  6. மிக்க நன்றி. உடனடியாகவே செயற்படுத்திவிட்டேன்.
    http://suvaithacinema.blogspot.com/

    ReplyDelete

Post a Comment

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்து
உங்கள் சந்தேகங்களை தனிப்பட்ட முறையில் கேட்க விரும்பினால் மெனுபாரில் உள்ள Contact me என்பதை அழுத்தி உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்..

Popular posts from this blog

அனைத்து தமிழ் சனல்களையும் நேரடியாக கண்டுகளிக்க உதவும் MY TAMIL TV (Free HD Mobile TV) அண்ட்ராய்டு அப்ளிகேசன்

பிளாக்கருக்கான அழகிய மெனுபார்கள் -(பிளாக்கர் டிப்ஸ்)

ஒரே கிளிக்கில் Animated Recent Post Gadget ஐ கொண்டுவர