Posts

Showing posts from February, 2011

பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டியை (Nav Bar) நீக்க -(பிளாக்கா் டிப்ஸ்)

Image
பிளாக்கரில் புதிதாக வலைப்பூ தொடக்கியுள்ளவா்கள் என் மின்னஞ்சலின் ஊடாக அடிக்கடி கேட்கும் கேள்வி பிளாக்கரில் மேல் பகுதியில் உள்ள பட்டி (Nav Bar) தங்களது வலைப்பூவினை அழகற்று காட்டுவதாகவும் அதனை எவ்வாறு நீக்குவது என்பதாகும். சகல புதிய பிளாக்கா் பயனாளிகளும் பயனளிக்கும் விதமாக எவ்வாறு பிளாக்கரில் Navigation Bar நீக்குவது என்பதனை இங்கு பதிவாக இடுகின்றேன். 1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள் 2. பின்  Dashboard ல் design > Edit HTML சென்று Expand your Widget Templates எ ன்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் 3. பின் கீழுள்ள HTML ல் நிரலில் ]]></b:skin> என்ற வார்த்தையை கண்டுபிடித்து அதற்கு பதிலாக #navbar-iframe,#navbar { display: none !important; } ]]></b:skin> மேலே உள்ள வரிகளை நகலெடுத்து ஒட்டிவிடுங்கள்.. [விபரப்படத்தை பெரிதாக்க படத்தின் மீது கிளிக் செய்யவும்] 4.இறுதியாக உங்கள் டெம்ளேட்டை சேவ் செய்யுங்கள் இனி உங்கள் வலைப்பூவில் Nav Bar தோன்றாது.. -Farhath Mohamed Farook- 

பெரிய அளவுள்ள பைல்களை வேகமான Copy செய்ய..

Image
பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ கொப்பி செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும். இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை கொப்பி செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல் கொப்பி ஆகவில்லை என்று கண்டுபிடிப்பது மிகச்சிரமமாகும். இத்தகைய பிரச்சினைகளின் போது என்ன செய்வது என்று திண்டாடுவோம் இதனை தவிர்த்து மிக வேகமாகவும் விரைவாகவும் பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்ய உதவும் ஒரு மென்பொருளே Tera Copy எனும் ஒரு இலவச மென்பொருளாகும். இந்த மென்பொருளை கணணியில் நிறுவியபின் நீங்கள் கொப்பி செய்யும் போதல்லாம் தானாகவே இயங்கி வேகமாக கொப்பி செய்யும். பெரிய அளவுள்ள பைல்களை  கொப்பி செய்யும் போது அதனை Pause, Resume செய்யும் வசதியும் இதில் உண்டு. அதுமாத்திரமின்றி பெரிய அளவுள்ள கோப்புகளை காப்பி செய்யும் போது ஏதாவது பைல் ஒன்றை கொப்பி செய்வதில் பிரச்சினை ஏற்படுமாயின் அந்த பைலை விட்டுவிட்டு ஏனைய பைல்களை காப்பி செய்யும் அனைத்து பைல்களையும் கொப்பி செய்து முடித்ததும் பிழையான பைலின் விபரத்தை காட்டும் அதனை சரி செய்து விரைவாக அதனையும் காப்பி செ

Pen Drive ல் இருந்து உங்கள் தனிப்பட்ட கோப்புகளை மறைக்க ஒரு இலவச மென்பொருள்

Image
இன்று அனைவராலும் Pen Drive பயன்படுத்தப்பட்டு வருகிறது, அதில் நாம் பல வகையான பைல்களையும் கோப்புகளையும் வைத்திருப்போம். அதில் சில அலுவலக ரகசிய பைல்களாகவோ அல்லது நமது தனிப்பட்ட பைல்களாகவோ இருக்கும். நமது பென் ரைவினை நண்பர்களுக்கு அவசர பயன்பாட்டுக்கு கொடுக்கும் போது அதில் உள்ள நமது ரகசிய கோப்புகளை பார்ப்பதற்காள வாய்ப்புக்கள் ஏற்படுகின்றது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையை தடுக்க நமது ரகசிய ஆவணங்களை மற்றையவா்கள் பார்க்க முடியாதவாறு பென் ரைவில் மறைத்து வைத்தல் வேண்டும். இதற்கு 1.69MB அளவையே கொண்டWinMend Folder Hidden எனும் ஒரு சிறிய மென்பொருள் உங்களுக்கு உதவிடும். இந்தமென்பொருளை பயன்படுத்தி உங்கள் Pen Drive ல் மறைக்கப்பட்ட கோப்புகளை வேறு எந்தக் கணனியிலும் திறக்க முடியாது. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் பென் ரைவில் மாத்திரமின்றி உங்கள் கணணியில் உள்ள கோப்புகளையும் மறைக்க பயன்படுத்தலாம் WinMend Folder Hiddenமென்பொருளின் தரவிறக்க சுட்டி  இங்கு அழுத்தவும் உங்கள் கணணியில் WinMend Folder Hidden  மென்பொருளினை நிறுவியபின் முதலில் திறக்கும் போது கீழே உள்ளது போன்று ஒரு விண்டோ திறக்கும் அதில் உங்கள்