Posts

Showing posts from September, 2010

கணணி வேகத்தை அதிகரிக்க விரைவான Disk Defragmenter Tool

Image
கணணியில் ஒரு சீரான கால இடைவெளிக்கிடையில் Disk Defragment செய்வதன் மூலம் கணணியின் வேகம் எப்போதும் குறையாமல் இருக்கும் என பலர் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். Disk Defragment என்றால் என்ன? கணணியினை எவ்வாறு விரைவாக Disk Defragment செய்து கணணியின் வேகத்தை அதிகரிக்கலாம் என்பதைப் பற்றிய ஒரு விரிவான பதிவு.. ப்ரேக்மன்ட்ஸ் (Fragments) என்றால் என்ன ? Hard Disk ல் கோப்பு ஒன்றை சேமிக்கும் போது நமது கணணியிலுள்ள இயங்குதளமானது அந்த கோப்பினை பல பகுதிகளாக பிரித்து அதனை நம் ஹாட் டிஸ்கில் பல்வேறு இடங்களில்  அங்கொன்றும் இங்கொன்றுமாக சேமிக்கிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட கோப்புகளின் சிதரள்களையே ப்ரேக்மன்ட்ஸ்(Fragments) என்கிறோம். குறித்த கோப்பின் சிதறல்கள் எங்கேங்கெல்லாம் உள்ளது என்பதை குறித்த ஹாட் டிஸ்கில் இயங்குதளம் பதிந்து கொள்கிறது.. பின் நாம் சேமித்த கோப்பினை திறக்க முற்படுகையில் இயங்குதளமானது குறித்த கோப்பு கணணி ஹாட் டிஸ்கில் எந்த Cluster ல் எந்த Sectorஇருக்கிறது என்பதை இதன் மூலம் கண்டறிந்து திறந்து கொள்ளும்.. இவ்வாறு வேவ்வேறு இடங்களில் கோப்புகளை சேமிக்கப்படும் போதும் கணணியில் மென் பொருட்களை ந

சுடச்சுட சுட்ட ஜோக்ஸ்

Image
நண்பா்கள் எனக்கு ஈமெலில் அனுப்பிய சில நகைச்சுவைகளை அப்படியே உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் எழுதிய மகாராசன் வாழ்க.. (யாருப்பா அந்த மகாராசா?) உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை.. ஏன் தெரியுமா? "பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று.. இப்படிக்கு Spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம் அவள் என்னை திரும்பி பார்த்தாள்.. நானும் அவளைப் பார்த்தேன்.. அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.. இப்படிக்கு பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம் காதல் One Side -ஆ பண்ணினாலும் Two side-ஆ பண்ணினாலும் கடைசியா Suicide- தான் பண்ணக்கூடாது இப்படிக்கு காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம் அனுமதி கேட்க்கவும் இல்லை... அனுமதி வழங்கவும் இல்லை... ஆனால் பிடிவாதமாக ஒரு முத்தம்.. "கன்னத்தில் கொசுக்கடி" இப்படிக்கு புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம் புலிக்கு பின்னாடி போன‌ மானும் பொண்ணுக்கு பின்னாடிப் போன‌ ஆணும்.. பிழைத்ததாக சரித்திரம் இல்லை.. இப்படிக்கு சிங்கிளா வாழ்ந்தாலும் சிங்கம் போல வாழ்வ

உங்கள் Blog தெளிவாக மொபைல் போனில் காட்சி தர

Image
முன்னேறிய மொபைல் புரட்சியால் மில்லியன் கணக்கான மக்கள் மொபைல் போனில் இருந்து இணையம் பாவித்து வருகிறார்கள்.... உங்களது தளத்தினை மொபைல் போன் இணைய பார்வைக்கு ஏற்ற வகையில் மாற்றுவதன் மூலம் உங்களது தளத்திற்கும் மொபைல் போன் வாசகர்களை பெற்றுக் கொள்ளலாம் உங்கள் தளத்தை மொபைல் போன் இணைய பார்வைக்கு எவ்வாறு ஏற்ற வகையில் மாற்றுவது என பார்ப்போம் 1. உங்கள் பிளாக்கரை Login செய்து கொள்ளுங்கள் 2. Layout > Edit HTML சென்று Expand your Widget Templates என்பதன் முன்னால் உள்ள பெட்டியில் டிக் அடையாளத்தை உறுதிப்படுத்தவும் 3. பின் கீழுள்ள HTML ல் நிரலில் கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும்.  <b:include data='blog' name='all-head-content'/> இந்த வரியை கண்டு பிடித்த பின் கீழே உள்ள கோடிங்கை Copy செய்து அந்த வரிகளின் கீழ் Paste செய்து விடவும். <meta content='IE=EmulateIE7' http-equiv='X-UA-Compatible'/> <b:if cond='data:blog.isMobile'> <meta content='width=device-width, initial-scale=1.0, user-scalable=0' name='viewport'/> &l

உங்கள் இணைய வேகத்தை அதிகரிக்க...

Image
கணணியில் இருந்து Mozilla Firefox மூலம் இணைய உலா வருபவர்களுக்கு இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்வதற்கு இது ஒரு பயனுள்ள பதிவு Mozilla Firefox மூலம் இணைய உலா வரும் பயனர்கள் உங்கள் உலாவியில் ஒரு சிறிய Tweak Network Add-on நிறுவி அதில் ஒரு சில மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் இணைய உலா வேகத்தினை அதிகரித்துக் கொள்ளலாம்.. இதன் மூலம் ஒரு சிறப்பான இணைய உலா அனுபவத்தினையும் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் Mozilla Firefoxல் உங்கள் இணைய வேகத்தினை அதிகரித்து ஒரு சிறப்பாக இணைய உலா அனுபவத்தை பெறலாம்  1. கீழே உள்ள தரவிரக்க சுட்டியை சொடுக்கி  Tweak Network Add-on  தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளுங்கள்  Add to Firefox (தரவிறக்க  சுட்டியை அழுத்தியதும் Firefox இன் மேல் சட்டத்தில் வரும் மஞ்சள் நிற பட்டியில் Allow உள்ள என்னும் பட்டனை அழுத்தியவுடன் Install செய்யும்படி கேட்கும் Install எனும்  பட்டனை அழுத்தி Install செய்து கொள்ளலாம்) 2. பின் உங்கள் Firefox உலாவியினை Restart செய்து கொள்ளுங்கள் 3. அடுத்து உங்கள் உலாவியில் TOOL மெனு சென்று Tweek Network Se

பிளாக்கர் Custom Templates இல் Static Page பிரச்சினைக்கான தீர்வு..

Image
Blogger இல்  Custom template  பயன்படுத்துபவர்களில் சிலருக்கு Blogger அறிமுகப்படுத்தியுள்ள  Static Page  (புதிய பக்கம்)  ஒன்றை  உருவாக்கினால் அந்த பக்கம் பிழையாக தோன்றலாம்... இப்படியான பிரச்சினைகளை சரி செய்து Static Page (புதிய பக்கம்)   உங்கள் பக்கத்தில் சரியாக தோன்றச் செய்வதற்கான பதிவு.. நண்பர் ஒருவர் அவரது பிளாக்கரில் புதிய பக்கத்தில் TOC Gatget இணைப்பதில் பிரச்சினை இருப்பதாக தெரிவித்து அவரது புதிய பக்கத்தின் URL ஐ தந்திருந்தார் . அவரது பக்கத்தை பார்வையிட்ட போது தான் Automatic Read More செயற்படும் படி அமைத்துள்ள டெம்பிளேட்களில் புதிய பக்கத்தை உருவாக்குவதில் பிரச்சினைகள் இருப்பது தெரிந்தது.. இத்தகைய டெம்பிளேட்டில் புதிய பக்கம் உருவாக்கி அந்த புதிய பக்கத்தை பார்வையிட்டால் அந்த புதிய பக்கத்தின் Summery ஐ மட்டும் காட்டி முழுதாக படிக்க Read More என்பதை அழுத்தும் படி இருக்கும்  Read More ஐ அழுத்தினால் முழுப்பக்கத்தையும்; காட்டாமல் அந்தப்பக்கத்தையே காட்டும்.. Automatic Read More ஆனது Post Page க்கு   மாத்திரமன்றி  Static Page க்கும் சேர்ந்து தொழிற்படுவதாலேயே இந்த பிரச்சினை ஏற்படுகின்

நமது பிளாக்கில் கையொப்பம் இடலாம் வாங்க..(Signature)

Image
நமது பிளாக்கில் ஒவ்வொரு பதிவின் கீழும் நமது கையொப்பத்தை இடலாம் விரைவாக நமது கையொப்பத்தையும் உருவாக்கி கொள்ளலாம்.. அனேக பிளாக்குகளில் ஒவ்வொரு பதிவின் கீழும் பதிவரின் கையொப்பம் இருப்பதை கண்டிருப்பீர்கள் இதே போல் உங்களது பிளாக்கிலும் ஒவ்வொரு பதிவின் கீழும் உங்கள் கையொப்பத்தை இட விரும்பினால் இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் பிளாக்கில் பதிவுகளின் கீழ் கையொப்பம் இடுவதற்கான படிமுறை படிமுறை 1 - கையொப்பம் உருவாக்குதல் நீங்கள்  Photoshop போன்ற softwareல் நிபுணத்துவம் பெற்றிருந்தால் அதன் மூலம் உங்களுக்கு விரும்பிய வடிவில் உங்கள் கையொப்பத்தை உருவாக்கி கொள்ளலாம். இணையத்தளத்தில் mylivesignature.com ஊடாக இலகுவில் உங்களுக்கு பிடித்த வடிவில்  உங்கள் கையொப்பத்தை மிக இலகுவாக உருவாக்கலாம்  இணையத்தள லிங்குக்கு இங்கு கிளிக் செய்க உருவாக்கிய உங்கள் கையொப்பத்தை ஏதாவது Picture sharing siteல் பதிவேற்றி உங்கள் கையொப்ப படத்திற்கான URL ஐ பெற்றுக் கொள்ளுங்கள் சில  Picture Sharing Site: 1. http://tinypic.com/ 2. http://picasa.google.com/ 3.  http://www.flickr.com/ 4. http://zooomr.com/ 5. http://photob

அனைத்துத் தளங்களிலும் உள்ள வீடியோ கோப்புகளை விரைவாக தரவிறக்க...

Image
இன்று நான் பதிவிடுவது Internet download manager ஐ பற்றி ... இந்த IDM மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவுவதன் மூலம் இணையத்தில் இருந்து மிக வேகமாக எந்த கோப்புகளை தரவிறக்கி கொள்ள முடியும். குறிப்பாக வீடியோக்களை அந்த தளத்தில் இருந்தே இலகுவில் தரவிறக்கம் செய்து கொள்ள முடிவது இதன் சிறப்பம்சமாகும்.. அதாவது... உதாரணமாக Youtube ல் ஒரு பாடலை தரவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமாயின் Youtube ல் குறித்த பாடலை Play செய்ததும் Player ன் வலது பக்க மேல் மூலையில் download this video  என்று ஒரு சுட்டி தோன்றும் அதனை அழுத்துவதன் மூலம் அந்த தளத்தில் இருந்தே விரைவாக குறித்த வீடியோவை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். சாதாரண முறையில் ஒரு கோப்பை தரவிறக்கம் செய்யும் போது ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒரு துண்டாகவே தரவிறக்கம் செய்யும். ஆனால் IDM மூலம் அதே கோப்பை தரவிறக்கம் செய்யும் போது குறித்த கோப்பை பல துண்டங்களாக பிரித்து ஒரே நேரத்தில் தறவிறக்கம் செய்வதால் மிக விரைவாக தரவிறக்கம் செய்யும்.. (கோப்பை IDM மூலம் தரவிறக்கம் செய்யும் போது.) Rapidshare, mediafire, megaupload  போன்ற தளங்களில் கணக்கு வைத்துள்ள

Pen Drive இல் இருந்து அழிந்த கோப்புக்களை மீட்டெடுக்கலாம் வாங்க..

Image
நாம் நமக்கு தேவையான முக்கியமான சில கோப்புகளை நமது pen driveல் சேமித்து வைத்திருப்போம். திடீரென சில வேளைகளில் அந்த கோப்புகள் மறைந்து காணப்படும் அல்லது அதே கோப்புகளை கிளிக் செய்தால் அந்த கோப்புகள் திற படாமல் அடம்பிடிக்கும். நாம் அந்த கோப்புகள் அழிந்து விட்டதா என pen drive ன் properties  பார்த்தால் ஏற்கனவே இருந்த கோப்புகளின் file size  ஐ used space  ஆக காட்டும். சரி நமது கோப்புகள் hiden ஆகியுள்ளது என முடி வெடுத்து Foler option  சென்று show hidden files, folder and drives  எனும் option ஐ கிளிக் செய்தால் அது வேலை செய்ய மறுக்கும். இதிலிருந்து நமது கோப்புக்களை மீட்டெடுக்க வழிதான் என்ன என திண்டாடுவோம். முதலில் இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது என்று பார்த்தால் நமது கணணியில் சில மல்வேர்கள், ஸ்பைவேர்கள் நின்று கொண்டு செய்யும் அட்டகாசம் தான் இது. இவ்வாறான மல்வேர்கள் நமது பைல்களின் தனித்தன்மையை மாற்றிவிடும் அதுமட்டுமன்றி நமது ஒரிஜினல் கோப்புகளை மறைத்து அதன் பெயரில் டுப்ளிகேட் மல்வேர் பைல்களை உருவாக்கி விடும்.. இதை அறியாமல் நாம் ஒரிஜினல் பைல் என்று நம்பி இந்த டுப்ளிகேட் மல்வேர் பைல்களையே கிளிக் செ

Blogger இல்Table of content page உருவாக்குவது எப்படி?

Image
நாம் பல்வேறு தலைப்புக்களில் பதிவுகளை நமது பிளாக்கில் எழுதி இருப்போம்.  அதற்கு பொருத்தமான லேபளையும் இட்டிருப்போம். இந்த குறித்த லேபளை கிளிக் செய்யும் போது அந்த லேபளையுடைய அனைத்து பதிவுகளின் பக்கங்களும் தோன்றும். இந்த குறித்த லேபளின் கீழ் அதிகமான பதிவுகள் இருப்பின் Older Post என்பதை கிளிக் செய்து ஒவ்வொரு பக்கமாக பார்வையிட வேண்டியிருக்கும். இது நமது வாசகர்கள் தமக்கு  வேண்டிய பதிவுகளை தேடி படிப்பதற்கு சிரமமான காரியமாக இருக்கும். இதை விடுத்து நமது பதிவுகளின் பொருளடக்கத்தை (Table of Content) தனியே ஒரு பக்கத்தில் காட்டினால் நமது வாசகர்கள் தமக்கு பிடித்த பதிவை எளிதாக இணங்கண்டு படித்துக் கொள்வார்கள். அதாவது தனியே ஒரு பக்கத்தில் குறித்த ஒவ்வொரு லேபளின் கீழும் நாம் எழுதிய அனைத்து பதிவுகளின் தலையங்கம் மட்டும் அதுவும் நாம் எழுதிய புதிய பதிவின் அருகில் NEW என்ற குறிச் சொல்லுடன் காட்சியளித்தால் நமது வாசகர்களுக்கு நமது பதிவை படிப்பதற்கு மிகவும் இலகுவாக இருக்கும்... Table of Content எனது Demo Page ஐ பார்வையிட இங்கே அழுத்தவும் தனியே ஒரு பக்கத்தில் இவ்வாறான பொருளடக்கத்தை காட்டும் Table of Cont